search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி - சீன அதிபர்
    X
    பிரதமர் மோடி - சீன அதிபர்

    சீன அதிபர் உருவம் பொறித்த பட்டு சால்வையை பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்

    சீன அதிபர் ஜி ஜின்பிங் உருவம் பொறித்த பட்டு சால்வையை அவருக்கு பரிசாக பிரதமர் மோடி வழங்கினார்.
    சென்னை:

    இந்தியா-சீனா அதிகாரிகள் இன்று கோவளம் தாஜ் ஓட்டலில் சந்தித்து பேசிய பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த ஓட்டல் அரங்கில் அமைக்கப்பட்டு இருந்த தமிழ்நாடு கைவினை பொருட்கள் கண்காட்சியை பார்வையிட்டார்.

    அந்த கண்காட்சியில் காஞ்சிபுரம் பட்டுச்சேலை கண்காட்சியும் இடம் பெற்று இருந்தது. பட்டு சேலைகள் எப்படி தயாரிக்கப்படுகின்றன? என்பது செய்முறை விளக்கமாக சீன அதிபருக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

    நெசவாளி ஒருவர் பட்டு துணியை நெய்து காட்டினார். அதை சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆச்சரியத்துடன் பார்த்தார். பிறகு ஜின்பிங், மோடி இருவரின் உருவம் பொறித்த பட்டு சால்வையை சீன அதிபருக்கு காட்டினார்கள்.

    சிவப்பு நிற பட்டு சால்வை

    பிரதமர் மோடி அந்த சிவப்பு நிற பட்டு சால்வையை விரித்து ஜி ஜின்பிங்கிடம் காண்பித்தார். மோடியும், ஜி ஜின்பிங்கும் அந்த சால்வையின் இருபுறத்தையும் பிடித்துக்கொண்டு பார்த்தனர்.

    ஜி ஜின்பிங் தனது உருவம் பொறிக்கப்பட்டு இருப்பதை பார்த்து மகிழ்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தார்.

    அந்த பட்டு சால்வையை சீன அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். பிரதமர் மோடியின் உருவம் பதித்த பீங்கான் தட்டு ஒன்றையும் சீன அதிபருக்கு பிரதமர் மோடி பரிசாக வழங்கினார்.

    ஓட்டலின் அந்த அரங்கில் சீனா-தமிழகம் இடையே வணிக உறவு இருந்தபோது பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அந்த நாணங்களையும் சீன அதிபர் பார்வையிட்டார். அவருக்கு அந்த நாணயங்கள் பற்றி பிரதமர் மோடி விளக்கி கூறினார்.
    Next Story
    ×