search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா சீனா பேச்சுவார்த்தை"

    • சீன ராணுவ வீரர்கள் அசல் எல்லை கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 19-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இருநாட்டு ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியாகவும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டியது உள்ளது.

    கடைசியாக 18-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 23-ந்தேதி கிழக்கு லடாக்கில் சுசுல் மோல்டோ சந்திப்பில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 19-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை தாங்குகிறார்.

    மேலும் வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் மற்றும் இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும், சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் ராணுவ அதிகாரிகள் தலைமையிலான குழு வினரும் பங்கேற்க உள்ளனர்.

    இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் 4 முறை படை குறைப்பிற்கு சீனா ஒப்புதல் அளித்தது. ஆனாலும் தற்போதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அசல் எல்லை கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே 19-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளது.

    குறிப்பாக இந்தியா தரப்பில் இருந்து டெப்சாங் சமவெளி, டென்சோக் பகுதிகளில் ராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கு இந்தியா தரப்பில் மீண்டும் அழுத்தம் கொடுக்க உள்ளனர்.

    • இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை
    • அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன்

    இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை" என தெரிவித்திருந்தார்.

    இந்த வார தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் தூதர் வாங் யீ இடையேயான சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த நவம்பரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த போது, எல்லை பிரச்னை குறித்தும் பேசியதாகவும், ஒருமித்த கருத்தை எட்டியதாகவும் கூறியிருந்தது.

    நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், அரிந்தம் பாக்சி அந்த அறிக்கையின் கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக கூறியிருப்பதாவது:

    "இரு நாட்டு உறவுகளில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கருகே உள்ள பகுதிகளில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இது குறித்து நவம்பரில் இரு தலைவர்களும் பேசினர். இதை அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசினார்கள்.

    இவ்வாறு பாக்சி தெரிவித்திருக்கிறார்.

    கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டன. விரிவான ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பல பகுதிகளில் துருப்புக்கள் விலக்கி கொள்ளப்பட்டன.

    • லடாக்கில் சீன ராணுவத்தின் அத்துமீறல் நடவடிக்கையால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் நீடித்துவருகிறது.
    • லடாக் எல்லை மோதல் தொடர்பாக இந்திய, சீன ராணுவம் இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

    புதுடெல்லி:

    லடாக்கின் கிழக்கு பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் அத்துமீறிய சீன ராணுவத்தால் இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் ஜூன் மாதத்தில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இரு தரப்பிலும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. இதனால் இந்தியாவும், சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீரர்களை எல்லையில் குவித்ததால் பதற்றம் நீடித்தது. எனவே படைகளை திரும்பப் பெற்று பதற்றத்தைத் தணிப்பதற்காக இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதன் பயனாக எல்லையில் உள்ள பங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் இரு தரப்பும் படைகளை திரும்பப் பெற்றன. இதைப்போல கடந்த ஆண்டு ஜூலை 31-ம் தேதி நடந்த 12-வது சுற்று பேச்சுவார்த்தையை தொடர்ந்து கோக்ரா பகுதியில் இருந்து இந்தியாவும், சீனாவும் ராணுவத்தை விலக்கிக்கொண்டன.

    ஆனாலும், டெம்சோக், தேப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் படைகளை வாபஸ் பெற சீனா மறுத்து வருகிறது.

    இந்நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான 16-வது சுற்று பேச்சுவார்த்தை வரும் 17-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா சார்பில் ராணுவ 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் அனிந்தியா சென்குப்தா பங்கேற்க உள்ளார்.

    ×