search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் 19-வது சுற்று பேச்சுவார்த்தை 14-ந்தேதி நடக்கிறது
    X

    இந்தியா-சீனா ராணுவ தளபதிகள் 19-வது சுற்று பேச்சுவார்த்தை 14-ந்தேதி நடக்கிறது

    • சீன ராணுவ வீரர்கள் அசல் எல்லை கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.
    • 19-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா-சீனா இடையே கடந்த 3 ஆண்டுகளாக எல்லை பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால் போர் பதட்டம் ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இருநாட்டு ராணுவ தரப்பிலும், தூதரக ரீதியாகவும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

    இதில் உடன்பாடு ஏற்பட்டு பெரும்பாலான பகுதிகளில் இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டியது உள்ளது.

    கடைசியாக 18-வது சுற்று பேச்சுவார்த்தை கடந்த ஏப்ரல் 23-ந்தேதி கிழக்கு லடாக்கில் சுசுல் மோல்டோ சந்திப்பில் நடந்தது. இதன் தொடர்ச்சியாக சுமார் 4 மாதங்களுக்கு பிறகு 19-வது சுற்று அமைதி பேச்சுவார்த்தை வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய குழுவுக்கு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி தலைமை தாங்குகிறார்.

    மேலும் வெளியுறவுத்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் மற்றும் இந்தோ தீபெத் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளும், சீனா தரப்பில் தெற்கு சின்ஜியாங் ராணுவ அதிகாரிகள் தலைமையிலான குழு வினரும் பங்கேற்க உள்ளனர்.

    இதுவரை நடந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் 4 முறை படை குறைப்பிற்கு சீனா ஒப்புதல் அளித்தது. ஆனாலும் தற்போதும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சீன ராணுவ வீரர்கள் அசல் எல்லை கோடு அருகே குவிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே 19-வது சுற்று பேச்சுவார்த்தையின் போது கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகளை குறைக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்த உள்ளது.

    குறிப்பாக இந்தியா தரப்பில் இருந்து டெப்சாங் சமவெளி, டென்சோக் பகுதிகளில் ராணுவ வீரர்களை வெளியேற்றுவதற்கு இந்தியா தரப்பில் மீண்டும் அழுத்தம் கொடுக்க உள்ளனர்.

    Next Story
    ×