search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi Xi Talks"

    • இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை
    • அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன்

    இந்தோனேசியாவின் பாலியில் கடந்த ஆண்டு நவம்பர் 16ம் தேதி இந்திய பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து கொண்டனர். இது குறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா, "இரு நாட்டு தலைவர்களும் பரஸ்பரம் மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனர். ஆனால் இந்திய-சீன எல்லை நிலவரம் குறித்து இரு தலைவர்களும் பேசவில்லை" என தெரிவித்திருந்தார்.

    இந்த வார தொடக்கத்தில் தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீனாவின் தூதர் வாங் யீ இடையேயான சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கடந்த நவம்பரில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்த போது, எல்லை பிரச்னை குறித்தும் பேசியதாகவும், ஒருமித்த கருத்தை எட்டியதாகவும் கூறியிருந்தது.

    நேற்று வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர், அரிந்தம் பாக்சி அந்த அறிக்கையின் கருத்துக்களை ஆமோதிக்கும் விதமாக கூறியிருப்பதாவது:

    "இரு நாட்டு உறவுகளில் அமைதி நிலவ வேண்டுமென்றால் இந்திய-சீன எல்லையின் மேற்குப் பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டுக்கருகே உள்ள பகுதிகளில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. இது குறித்து நவம்பரில் இரு தலைவர்களும் பேசினர். இதை அப்போதைய வெளியுறவு செயலாளர் சொல்லாமல் விட்டு விட்டதாக நான் நினைக்கிறேன். இருதரப்பு உறவுகளை ஸ்திரப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் தலைவர்கள் பேசினார்கள்.

    இவ்வாறு பாக்சி தெரிவித்திருக்கிறார்.

    கிழக்கு லடாக் பகுதியில் உள்ள சில முக்கிய இடங்களில் இந்திய மற்றும் சீன துருப்புக்கள் மோதலில் ஈடுபட்டன. விரிவான ராணுவ பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து பல பகுதிகளில் துருப்புக்கள் விலக்கி கொள்ளப்பட்டன.

    ×