search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு புதிய திட்டம்
    X
    தமிழக அரசு புதிய திட்டம்

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.50 கோடியில் அவசரகால நிதி - தமிழக அரசு புதிய திட்டம்

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் தேவையான சிகிச்சைகள் அளிக்க ரூ.50 கோடி அவசரகால நிதியில் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    சென்னை:

    விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்தில் தேவையான சிகிச்சைகள் அளிப்பதற்கான செலவுகளை ஈடுசெய்வதற்கான நிதியை உருவாக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

    இதைத் தொடர்ந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்கும் முயற்சியாக காப்பீட்டு நிறுவனத்துடன் அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். சமீபத்தில் நடந்த சாலை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் ஜெனரல் இன்சூரன்ஸ் கவுன்சில் நிர்வாகிகள் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உயிரை காப்பாற்றுவதற்காக ரூ.50 கோடி நிதியில் புதிய திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    மேலும் தனியார் அவசர சிகிச்சை மையங்களுடன் இணைந்து இதற்கான பணியை மேற்கொள்ள மாநில சுகாதாரத்துறையை கேட்டுள்ளனர்.

    Next Story
    ×