search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றிய மோடி
    X
    ஐநா சபை கூட்டத்தில் உரையாற்றிய மோடி

    ஐநா சபையில் தமிழில் பேசிய மோடி- அமைச்சர் செல்லூர் ராஜூ, கவிஞர் வைரமுத்து பாராட்டு

    ஐநா சபையில் தமிழில் பேசிய பிரதமர் மோடியை அமைச்சர் செல்லூர் ராஜூ, கவிஞர் வைரமுத்து பாராட்டினர்.
    சென்னை:

    ஐநா சபை பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழ்ப் புலவர் கணியன் பூங்குன்றனாரின், யாதும் ஊரே யாவரும் கேளீர், என்ற பாடல் வரியைக் குறிப்பிட்டு பேசினார்.  நாம் அனைவருக்கும் எல்லா இடங்களும் எல்லாருக்கும் சொந்தம் என மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழில் கனியன் பூங்குன்றனார் எழுதியிருப்பதாக மோடி குறிப்பிட்டார்.

    ஐநா சபையில் மோடி தமிழில் பேசியதற்கு பல்வேறு தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழ் பேசும் பிரதமர் மோடியை தமிழக மக்கள் பாராட்ட வேண்டும் என்றும், ஐ.நா.வில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேசியது தமிழுக்குப் பெருமை சேர்த்திருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜூ பாராட்டினார்.

    அமைச்சர் செல்லூர்  ராஜூ, கவிஞர் வைரமுத்து

    இதேபோல் பிரதமர் மோடியை பாராட்டி கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். “ஐநா சபையில் தமிழ் சொன்னீர்கள், பேரானந்தம் பிரதமர் அவர்களே. தாயகத்திலும் தமிழ் உயர்த்தினால் நன்றி உரைப்போம் நாங்களே” என வைரமுத்து டுவிட் செய்துள்ளார்.
    Next Story
    ×