search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்
    X
    கொசஸ்தலை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதை காணலாம்

    திருத்தணியில் 17 செ.மீட்டர் மழை கொட்டித்தீர்த்தது

    திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இன்று பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 17.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
    திருவள்ளூர்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    நேற்றும், நேற்று முன் தினமும் அதிகாலை சிறிது நேரம் மழை கொட்டியது. பின்னர் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    இதன் காரணமாக வெப்பத்தால் தவித்த மக்கள் நிம்மதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலையும் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் சுமார் அரைமணி நேரம் நல்ல மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. அதிகபட்சமாக திருத்தணியில் 17.3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நள்ளிரவு தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்து. இதனால் திருத்தணி பகுதி மழைநீரில் மிதந்தது.

    லட்சுமாபுரம், வேலஞ்சேரி, முருக்கம்பட்டு, கீழாந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    இந்த திடீர் கனமழை காரணமாக திருத்தணி கொசஸ்தலை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதிக அளவு தண்ணீர் செல்வதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள்.

    இதேபோல் ஆர்.கே .பேட்டை, தாமரைப்பாக்கம், பள்ளிப்பட்டு, ஜமீன் கொரட்டூர், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.

    திருள்ளூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-

    திருத்தணி - 173
    கும்மிடிப்பூண்டி - 18
    செங்குன்றம் - 10
    பள்ளிப்பட்டு - 80
    ஆர்.கே.பேட்டை - 86
    சோழவரம் - 28
    பொன்னேரி - 23
    செம்பரம்பாக்கம் - 24
    ஜமீன்கொரட்டூர் - 32
    பூந்தமல்லி - 11
    திருவாலங்காடு - 21
    தாமரைப்பாக்கம் - 36
    திருவள்ளூர் - 24
    பூண்டி - 73
    ஊத்துக்கோட்டை - 15


    Next Story
    ×