search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை மறியல்
    X
    சாலை மறியல்

    100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு

    100 நாள் வேலை கேட்டு பொதுமக்கள் சாலை மறியலுக்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    முசிறி:

    முசிறி அருகே பேரூர் கிராமத்தில் தேசிய ஊரக வேலை 100 நாள் திட்டத்தில் பணிகள் வழங்க பலமுறை வலியுறுத்தியும் இதுவரை பணிகள் ஒதுக்கவில்லை. இதனை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினருடன் இணைந்து ஜெம்பு நாதபுரத்தில் சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்திருந்தனர். 

    இதையடுத்து பேரூர் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் சாலைமறியல் செய்வதற்காக திரண்டு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த முசிறி ஊராட்சி ஒன்றிய திட்ட ஆணையர் ஜான்கென்னடி, போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ஹாரூண் மற்றும் பலர் பொதுமக்களை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தினர்.

    பொதுமக்கள் தரப்பில் 100 நாள்வேலை திட்டம் தொடர்ந்து வழங்க வேண்டும், அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்து தரவேண்டும், நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விடுத்தனர்.

    இதை யடுத்து 100 நாள் வேலை திட்டத்தில் பணிகள் விரைந்து வழங்கவும், நிலுவை கூலித்தொகை வழங்கிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும், கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்தம் செய்தும், பழுதான மின்மோட்டார் சீரமைத்தும், புதிய ஆழ்துளைகிணறு அமைத்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொது மக்கள் தற்காலிகமாக சாலை மறியலை கைவிடுவதாக தெரிவித்தனர். வருவாய்த் துறையினர், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உள்பட பலர் உடனிருந்தனர். சாலைமறியல் செய்வதற்காக பொதுமக்கள் திரண்டதால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×