search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்
    X
    டி.என்.பி.எஸ்.சி. அலுவலகம்

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு

    டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    சென்னை :

    தமிழக அரசில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்பட 6491 பணியிடங்களை நிரப்புவதற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வு எழுத 14 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.

    இத்தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை  www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. ஹால் டிக்கெட் இணையத்தில் கிடைக்கவில்லை என்றால் தேர்வு கட்டணம் செலுத்திய ரசீதை contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் எனவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×