search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எஸ்.சி"

    • ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
    • நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    ஒருங்கிணைந்த குரூப் 2 பணியிடங்களுக்கான முதல்கட்ட நேர்முகத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதற்கான முடிவை டி.என்.பிஎஸ்.சி வலைதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கான முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை

    அரசுத் துறைகளில் குரூப் 2 மற்றும் 2ஏ பணி நிலையில் காலியாக உள்ள 6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 2 மற்றும் 2ஏ முதல்நிலைத் தேர்வு கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வுக்கு 11 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்த நிலையில், சுமார் 9 லட்சம் பேர் தேர்வை எழுதினர். இவர்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு, அக்டோபர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகின. குரூப் 2, 2 ஏ முதன்மைத் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 11-ம் தேதி வெளியாகியது.

    நேர்காணல் கொண்ட 161 பதவிகளுக்கு மட்டும் 1:3 என்ற அளவில், 483 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 12 முதல் நேர்காணல் நடத்தப்பட்டது.

    நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கான முடிவுகள் தேர்வாணைய வலைதளத்தில் இருவழித் தொடர்பு முறையில் (Interactive Mode) வெளியிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நேர்காணல் பதவிகளுக்கு மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. நேர்காணல் அல்லாத பணிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பட்டியல் வெளியாகவில்லை, இன்னும் சில தினங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • 1,416 பேர் தேர்வு எழுத வரவில்லை.
    • 10 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது.

    கோவை,

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணை–யத்தால் (டி.என். பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த குடிமை ப்ப––ணிகள் குரூப்-3 ஏ பதவி–க்கான எழுத்து தேர்வு தமிழகத்தில் நேற்று நடந்தது.

    தொடர்ந்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு ஒருங்கிணைந்த புள்ளியியல் சார் நிலை பணிகளில் புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211 பேர், கணக்காளர்- 5, புள்ளியியல் தொகுப்பாளர் ஒருவர் என மொத்தம் 217 காலி பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் இன்று 15 மாவட்டங்களில் நடைபெற்றது.

    இதற்கான தேர்வு மையங்கள் கல்லூரிகளில் அமைக்கப்பட்டிருந்தன. கோவையில் 10 தேர்வு மையங்களில் இந்த தேர்வானது நடைபெற்றது.

    தேர்வு எழுதுவதற்காக தேர்வர்கள் காலை 8 மணி முதலே தேர்வு மையங்களுக்கு வர தொடங்கினர்.

    பின்னர் அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு எழுதும் அறைக்கு சென்றனர். முன்னதாக அவர்களது நுழைவு சீட்டை அதிகாரிகள் சரி பார்த்தனர். இதில் ஹால்டிக்கெட், அடையாள அட்டை கொண்டு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையங்களுக்கு வராதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை.

    தேர்வு மையத்தில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தேர்வு மையங்களில் வீடியோ மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது.

    இந்த தேர்வு காலை, பிற்பகல் என 2 கட்டமாக நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை தேர்வு நடந்தது. பிற்பகலில் 2.30 மணி முதல் 5.30 மணி வரை தேர்வு நடைபெறுகிறது.

    கோவையில் 2831 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். இதில் 1,415 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 1,416 பேர் தேர்வு எழுத வரவில்லை. 

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் டி.என்.பி.எஸ்.சி இலவச பயிற்சி வகுப்பு நடந்தது.
    • நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தியது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நண்பர்கள் ரோட்டரி சங்கம், டால்பின் அகடாமி, முகில் இன்ஸ்டியூஷன் ஆகிய அமைப்புகள் இணைந்து டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளை நடத்தினர்.

    சங்கத்தின் தலைவர் அங்குராஜ் தொடங்கி வைத்து பேசினார். அகடாமி நிறுவனர் முருகதாசன் வரவேற்றார். டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வில் 10 ஆண்டுகளுக்கு மேலான பணி அனுபவம் பெற்றுள்ள விரிவுரையாளர்களான முகில், வீரையா, செல்வி ஆகியோர் பயிற்சி வகுப்பினை நடத்தினர்.

    சுமார் 45 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இதில் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சமுத்திரவேல், ரோட்டரி நிர்வாகிகள் முருகானந்தம், வினோத்குமார், ஸ்டார் ஹெல்த் வெங்கடேஷ், பத்திர எழுத்தர் ராஜாமணி, விக்ரம் முருகன், கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். சங்கத்தின் செயலாளர் பால்சாமி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திட்ட இயக்குனர்கள் கந்தசாமி, அமுதா ஹரிஹரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×