search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    திண்டுக்கல்லில் சாலை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

    திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் நடவடிக்கையை எதிர்த்து சாலைப்பணியாளர்கள் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் உள்ள சாலைகள் 250 கிலோ மீட்டர் தூரத்திற்கு தனியார் பராமரிப்புக்கு தமிழக அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களைக் கொடுத்து தாரைவார்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டிக்கும் வகையில் திண்டுக்கல் ஆத்தூர் நத்தம் வத்தலகுண்டு கொடைக்கானல் ஆகிய பகுதிகளிலிருந்து 150க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 


    திண்டுக்கல் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட சாலைப் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். பழனி கோட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். இவர்களுடைய வேலை வாய்ப்பு பறிபோகும் அபாயம் உள்ளதால் சாலைப்பணியாளர்கள் இந்த போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றப் போவதாக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். சாலைப் பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியம், பொதுச்செயலாளர் அம்ச ராஜ், பொருளாளர் தமிழ், மாநிலச் செயலாளர் ராஜமாணிக்கம், சாலை ஆய்வாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பொது செயலாளர் ஜெயசீலன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    Next Story
    ×