search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பணியாளர்கள்"

    • ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும்.
    • உயர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

    திருப்பூர் :

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் , அதேபோல் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும், ஆனால் தற்போது 1,900 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்திலும் உயர்நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பத்து சதவீதம் ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சலவை படி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் பட்டை நாமம் போட்டு திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி உடல் முழுவதும் பட்டை நாமம் அணிந்தும் போராட்டம் செய்தனர்.

    • தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    ஊட்டி,

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வலியுறுத்தி ஊட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கோட்ட தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்கள், தொழில்நுட்ப கல்வித் திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதியம் ரூ.20,200, தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். பணியின் போது சாலை பணியாளர்கள் உயிரிழந்தால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் நியமனம் கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் பலர் கலந்துகொண்டனர்.

    • மதுரை அருகே சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மதுரை

    மதுரை அழகர்கோவில் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு இன்று சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார்.

    துணைத்தலைவர்கள் மாரியப்பன், ரவிசந்திரன், ஜீவானந்தம், சந்திரசேகர், மணிமாறன், மாவட்ட செயலாளர் சோலையப்பன், மாநில செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம், தர ஊதியம் வழங்க வேண்டும்.

    இறந்த சாலை பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகளில் கொடியேந்தி கோஷமிட்டனர்.

    ×