search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிளாஸ்டிக் கவர்
    X
    பிளாஸ்டிக் கவர்

    திண்டுக்கல்லில் பிளாஸ்டிக் பயன்பாடு மீண்டும் அதிகரிப்பு - அதிகாரிகள் கவனிப்பார்களா?

    திண்டுக்கல்லில் அதிகாரிகள் சோதனை செய்வது குறைந்துள்ளதால் தற்போது மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது.
    குள்ளனம்பட்டி:

    தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்க பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாற்றுப்பொருட்களான பாக்கு மட்டை தட்டு, காகித பை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது.

    குறிப்பாக ஓட்டல்களுக்கு பார்சல் வாங்க செல்பவர்கள் தூக்கு சட்டியை பயன்படுத்தினர். பிளாஸ்டிக் கவர்களில் சூடான உணவு பொருட்களை பேக்கிங் செய்வதால் பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருகின்றது. மேலும் குறைந்த மைக்ரானில் செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்பதால் பிளாஸ்டிக் தடை பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

    மேலும் அதிகாரிகள் வணிக வளாகங்கள், ஓட்டல்கள், கடைகளில் அதிரடி சோதனை நடத்தி பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் கெடுபிடி அதிகரித்ததால் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்தது. இதனால் சுற்றுச்சூழலும் இயற்கை முறையில் மாறியது.

    தற்போது அதிகாரிகள் சோதனை செய்வது குறைந்துள்ளதால் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக சாலையோர ஓட்டல்களில் பிளாஸ்டிக் கவர்களிலேயே உணவு பொருட்களை கொடுக்கின்றனர். இதனால் பழைய முறையில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்துள்ளது.

    எனவே அதிகாரிகள் சோதனை செய்து பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×