என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  செங்கிப்பட்டியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  செங்கிப்பட்டியில் லோடு ஆட்டோ மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  வல்லம்:

  தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே உள்ள முத்தாண்டிப்பட்டியை சேர்ந்தவர் செபாஸ்டியன் (வயது47). தொழிலாளி. இவரும், அதே ஊரை சேர்ந்த மேலும் மூவரும் நேற்று இரவு செங்கிப்பட்டியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர் செபாஸ்டியன் மற்றும் சேசுராஜ் (44) என்பவரும் ஒரு மோட்டார் சைக்கிளிலும், மற்ற 2 பேரும் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சானூரப்பட்டிக்கு சென்றனர்.

  அப்போது செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு லோடு ஆட்டோ மீது செபாஸ்டியன் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த செபாஸ்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயமடைந்த சேசுராஜ் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த செங்கிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×