என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  சுவாமிமலை அருகே பஸ் மோதி சிற்பி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சை மாவட்டம் சுவாமிமலை அருகே சாலையில் நடந்து சென்ற சிற்பி மீது பஸ் மோதிய விபத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
  சுவாமிமலை:

  தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை அடுத்த பாபுராஜபுரம் ஆற்றங்கரை தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகானந்தம் (வயது 33) சிற்பி. இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் கடையில் பொருட்கள் வாங்குவதற்காக நடந்து சென்றார். அப்போது புதுச்சேரியில் இருந்து திருவையாறு நோக்கி சென்ற புதுச்சேரி பஸ் முருகானந்தம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சுவாமிமலை இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருவேங்கடம், ஏட்டு மாரியப்பன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று முருகானந்தம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ் டிரைவர் தப்பி ஓடிவிட்டதால் பஸ்சை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
  Next Story
  ×