என் மலர்

  செய்திகள்

  விபத்து
  X
  விபத்து

  திருபுவனை அருகே மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருபுவனை அருகே நடந்து சென்ற முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

  வில்லியனுர்:

  திருபுவனை அருகே உள்ள சன்னியாசிகுப்பத்தை சேர்ந்தவர் மண்ணாங்கட்டி (வயது65). இவர் மதகடிப்பட்டில் உள்ள தன்னுடைய மகள் வீட்டிற்கு சென்று இருந்தார்.

  சம்பவத்தன்று டீகுடிப்பதற்காக மெயின்ரோடு அருகே சென்ற போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மண்ணாங்கட்டி மீது மோதியது. இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.

  இது குறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கொண்டாபாலாஜிராவ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  விபத்தில் இறந்த மண்ணாங்கட்டிக்கு தனம் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×