என் மலர்

  செய்திகள்

  போலீசார் விசாரணை
  X
  போலீசார் விசாரணை

  ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் வாலிபர் பிணம் - போலீசார் தீவிர விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பிணமாக கிடந்த வாலிபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  செய்துங்கநல்லூர்:

  ஸ்ரீவைகுண்டம் பஸ் நிலையம் பின்புறம் தாமிரபரணி ஆற்றின் திருமஞ்சன படித்துறை அருகில் நேற்று காலையில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக மிதந்தார். அவர் ஜட்டி மட்டும் அணிந்து இருந்தார். அங்கு படித்துறையில் சந்தன நிறத்தில் கட்டம் போட்ட சட்டை, பனியன், செருப்பு ஆகியவை இருந்தது. எனவே அவர் தனது ஆடைகளை கழட்டி வைத்து விட்டு, ஆற்றில் குளிக்க சென்றபோது, ஆழமான பகுதியில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

  இதுகுறித்து தகவல் அறிந்ததும், ஸ்ரீவைகுண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜட்சன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபரின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆற்றில் பிணமாக மிதந்த வாலிபர் யார் என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் வாலிபரின் புகைப் படம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் காணாமல் போனவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×