என் மலர்

  செய்திகள்

  தற்கொலை
  X
  தற்கொலை

  தேனி அருகே கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அருகே கர்ப்பிணி உள்பட 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  தேனி:

  தேனி அருகே ஆண்டிப்பட்டி வருசநாடு முருக்கோடையை சேர்ந்தவர் தேசிங்குராஜா மகன் அமர்நாத் (வயது29). அதே பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வேலை பார்த்து வருகிறார்.

  இவருடைய மனைவி அபிநயா கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அபிநயா தற்போது 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்த நிலையில் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இது குறித்து அபிநயாவின் தந்தை மாசிமாயன் வருசநாடு போலீசில் புகார் அளித்தார். அபிநயாவை வரதட்சணை கேட்டு துன்புறுத்தி உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார். திருமணம் ஆகி 6 மாதங்களே ஆவதால் ஆர்.டிஓ. விசாரணை நடத்த உள்ளார்.

  பெரியகுளம் அருகே ஏ.புதுப்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகள் பவானி (22). கடந்த சில நாட்களாக நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த பவானி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


  Next Story
  ×