search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.
    X
    அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.

    அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டம்

    தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குன்னூர்:

    குன்னூர் அருவங்காடு பகுதியில் மத்திய அரசுக்கு சொந்தமான வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கு அங்கு வேலை பார்த்து வரும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிற்சாலையின் கூட்டுக்குழு சார்பாக ஊழியர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் தொழிற்சாலையின் வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    ஒரு மாதகாலம் தொடர்ந்து வேலைநிறுத்த பேராட்டத்தில் ஈடுபட உள்ளோம். நாட்டிற்காக இந்த தொழிற்சாலையில் இருந்து 200 சதவீதம் உற்பத்தி செய்துதருகிறோம். 300 கோடி ரூபாய் அளவிற்கு ராணுவத்திற்கு தேவையான வெடிமருந்துபொருட்களை உற்பத்தி செய்து கொடுக்கிறோம். இந்த தொழிற்சாலையை மத்திய அரசு தனியார் மயமாக்கமுயன்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தரதொழிலாளர்களும் தற்காலிக தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த தொழிற்சாலை படை கால வாரியத்தை திறமையற்றது என்ற பல விதமாக வி‌ஷ பிரசாரங்களை பரப்பி விட்டு தனியார் பெரு முதலாளிகளுக்கு தாரை வார்க்கும் வேலையை நிகழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து இந்த தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.
    Next Story
    ×