search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊழியர்கள் போராட்டம்"

    • பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.
    • துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் 37 வங்கி கணக்குகளை வருமான வரித்துறை கடந்த 6-ந்தேதி முடக்கியது. ரூ.424 கோடி வருமான வரி செலுத்தாமல் நிலுவை வைத்து இருந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு ஊதியம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் இறுதியில் சம்பளம் வழங்கப்படும்.

    ஆனால் நேற்று வரை அவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. ஓய்வூதியதாரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள் பணியை புறக்கணித்து சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தந்தி டிவிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில்,

    தமிழகம் முழுவதும் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் நடந்தது என்ன என்பது குறித்து குழு அமைத்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்.

    முடக்கப்பட்ட வங்கி கணக்குகள் விடுவிக்கப்பட உள்ளன. சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள், பணியாளர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கப்படும். சென்னை பல்கலைக்கழகத்தின் பெருமை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்கும்.

    துணைவேந்தர் நியமனம் குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை பல்கலைக்கழகத்தின் பிரச்சனை இன்றோடு முடிந்துவிடும் என்று அவர் கூறினார்.

    • 98 பேர் வேலை செய்து வருகின்றனர்
    • குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பேச்சுவார்த்தை

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தம் 29 ஊராட்சிகள் உள்ளது. இதில் பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் மொத்தம் 74 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது.

    இந்த மையங்களில் 56 அங்கன்வாடி பணியாளர்கள், 42 உதவியாளர்கள் என மொத்தம் 98 பேர் வேலை செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் தற்போது காவேரிப்பாக்கம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலராக பணியாற்றிவரும் விஜயலட்சுமி என்பவர் அங்கன்வாடி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதகவும், இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிவருவதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் காவேரிப்பாக்கம் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலரை மாற்றக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வசந்தி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிறகு பஸ்கள் இயக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டிரைவராக கருப்பணன், நடத்துனராக தமிழ்ச்செல்வன் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வழித்தடம் மாற்றி அரசு பஸ்சை இயக்கியதாக புகார் எழுந்தது.

    இதனைதொடர்ந்து கிளை மேலாளர் அவர்கள் 2 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். தொழிலாளர்களை பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டு வருவதாக புகார் கூறி அம்பேத்கர் தொழிற்சங்க நிர்வாகிகள் பஸ்களை இயக்க மறுத்து பணிமனை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் பஸ்கள் இயக்கப்படாமல் பொதுமக்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் சுமார் 2 மணிநேரம் தாமதமாக பஸ்கள் இயக்கப்பட்டது.

    • அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.
    • அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்

    கிருஷ்ணகிரி,

    வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 400-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் 100 சதவீதம் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

    இதில், தொடந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.

    அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட எங்களது கோரிக்கையின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    • ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம்
    • மின்கட்டணம் செலுத்த வந்த பொதுமக்கள் பாதிப்பு

    வந்தவாசி:

    வந்தவாசி துணை மின் நிலையத்தில் ஊழியர்க ளான ராம்பிரகாஷ், பாபு, காண்டீபன், ஆகியோர் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்து நபர் மின்சார ஊழியர்கள் மீது திடீரென தாக்கியுள்ளார்.

    இது குறித்து மின்சார ஊழியர்கள் வந்தவாசி தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று அனைத்து மின் ஊழியர்கள் பதிவேட்டில் கையொப்பமிடாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மின் ஊழியர்கள் மீது தாக்கிய நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலியுறுத்தினர்.

    மின் ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் மின் கட்டணம் செலுத்துபவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து திரும்பிச் சென்றனர்.

    மின் ஊழியரை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மின்சார ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம் போராட்டத்தால் வந்தவாசி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி கோஆப்ரேட்டிவ் காலனியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டம் நடந்தது.

    3 சதவீத அகவிலைப்படி உயர்வை ஓய்வூதியர் உள்பட அனைவருக்கும் வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியருக்கு தமிழகம் முழுவதும் ஒரே சீரான ஊதியம் வழங்க வேண்டும். தொகுப்பூதிய ஊழியருக்கு பின்பாக்கி ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் ராமர் தலைமை தாங்கினார். மத்திய அமைப்பு குடிநீர் வடிகால் வாரிய ஊழியர் சங்க மாநில செயலாளர் ஆத்மநாதன், மாவட்ட செயலாளர் சங்கர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் சங்க பொறுப்பாளர்கள் செந்தில்குமார், விஜயன், கோவிந்தராசன், சிவலிங்கம், சிவா, சிவசங்கர், அழகேசன், வீராஜி, சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மல்லையன் நன்றி கூறினார்.

    • புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு மின்சார வாரிய ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் மின்துறையை தனியார்மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மின் பழுது நீக்குதல், கட்டணம் வசூல், மின்அளவீடு செய்தல் போன்ற அடிப்படை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மின்துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக மாநிலம் முழுவதும் இருளில் மூழ்கியது.

    இதைக் கண்டித்து தீப்பந்தம் ஏந்தியும், தடைகளை ஏற்படுத்தியும் பல இடங்களில் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் மின்வெட்டு ஏற்படுமானால் மத்திய அரசின் அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தின் (எஸ்மா) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டது.

    இதற்கிடையே, தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஊழியர்களை துணை ராணுவம் மற்றும் போலீசார் நேற்று கைது செய்து நள்ளிரவில் விடுவித்தனர்.

    இந்நிலையில், மின்துறை ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    அப்போது, மின்துறை ஊழியர்கள் முதல் மந்திரி ரங்கசாமியை சந்திக்க சட்டபேரவைக்கு வந்தனர். இதனால் அமைச்சரவை கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மின்துறை ஊழியர்களுடன் முதல் மந்திரி ரங்கசாமி மற்றும் மின்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினர். மின்துறை ஊழியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்கும் என முதல் மந்திரி ரங்கசாமி உறுதியளித்ததைத் தொடர்ந்து கடந்த 6 நாளாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

    ×