கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்
கிருஷ்ணகிரியில் வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்
Published on

கிருஷ்ணகிரி,

வருவாய்த்துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9-ந் தேதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 400-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், ஊழியர்கள் 100 சதவீதம் விடுப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதில், தொடந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடனே வெளியிட வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக துணை தாசில்தார் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும்.

அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையை வெளியிட வேண்டும். அரசுடனான பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட எங்களது கோரிக்கையின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com