search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "employees protest"

    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 -ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர் முன்னிலை வகித்தார்.

    ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரவினா, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

    • ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    • காலாவதியான சுங்க சாவடிகளை மூடக்கோரி நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முரளி, பரசுராமன் மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் அடிக்கடி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    • 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.

    மகுடஞ்சாவடி:

    சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழு தொகையையும் வழங்க வேண்டும், தமிழக முழுவதும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    • ரெயில்வே துறை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு
    • காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தல்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள ஆர்ஓ எச் ஷெட் வளாகத்தில் அகில இந்திய எஸ்சி எஸ்டி ரெயில்வே சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜோலார்பேட்டை கிளை நிர்வாகி எஸ் சந்திரகாசி தலைமை தாங்கினார். மேலும் இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் என ரெயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டு ரெயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும்.

    மேலும் ரெயில்வே நிர்வாகம் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டு வருகிறது.

    இதனைத் தவிர்த்து காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்குறைப்பு நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

    தொழிலாளரின் உரிமையை பறிக்காதே என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    • உயர் அதிகாரிகளை கண்டித்து நடந்தது
    • ஏராளமனோர் கலந்து கொண்டனர்

    போளூர்:

    செங்கல்பட்டு மாவட்டம் காட்டான் குளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக மண்டல துணை வட்டார வளர்ச்சி அதிகாரி பார்த்திபன் பணி சுமை காரணமாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது சம்பந்தமாக உயர் அதிகாரிகளை கண்டித்து போளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆணையாளர் பரணிதரன் தலைமையில் வட்டார வளர்ச்சி அதிகாரி பாபு மேலாளர் அருள் உள்பட 30 ஊழியர்கள் ஆர்ப்பா ட்டத்தில் ஈடுப ட்டனர்.

    • 50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் ரெயில்வே ஊழியர்கள், சம்பளத்தை உயர்த்தக்கோரி நேற்று வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

    நாட்டில் விலைவாசி உயர்வுக்கு ஈடாக தங்களது சம்பளம் போதவில்லை என்றும் 11 சதவீதம் உயர்த்த வேண்டும் என்றும் ஊழியர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

    50 ஆயிரம் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் இங்கிலாந்து முழுவதும் ரெயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ரெயில் சேவை முடங்கி போய் இருக்கிறது.

    ரெயில்கள் இயக்கப்படாததால் ஆயிரக்கணக்கானோர் பஸ்கள், கார்களில் அலுவலகங்கள், மற்ற இடங்களுக்கு செல்கிறார்கள்.

    இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மேலும் வாடகைகார்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பஸ் நிறுத்தங்களில் ஏராளமான மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    இதற்கிடையே போராட்டத்தை கைவிட இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறும்போது, இங்கிலாந்து மக்கள் மற்றும் ரெயில் பணியாளர்களின் நலனுக்காக ஒரு விவேகமான சமரசத்துக்கு வர வேண்டிய நேரம் இது என்றார்.

    100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது.
    நாகர்கோவில்:

    100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று நடந்தது. போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில தலைவர் லாசர் தலைமை தாங்கினார். கிருசாந்துமேரி, ராஜதாஸ், சாகுல்ஹமீது உள்பட பலர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட தலைவர் கண்ணன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் செல்லசுவாமி, முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ. லீமாரோஸ், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் தங்கமோகனன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ரவி, ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் எபிலைசியஸ் ஜோயல், மாதர் சங்க மாவட்ட செயலாளர் ரகுபதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். 

    முடிவில் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலைவிளை பாசி போராட்டத்தை முடித்து வைத்தார்.
    ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர் ஊராட்சி அலுவலகத்துக்கு ஊழியர்கள் பூட்டு போட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
    பொன்னேரி:

    மீஞ்சூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், பதிவுத் துறை எழுத்தாளர்களுக்கு வழங்கும் இணையான ஊதியத்தை வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், ஊரக வளர்ச்சி துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மீஞ்சூர் ஒன்றிய அலுவலகத்தில் போராட்டங்கள் நடத்தினர்.

    அவர்கள் அலுவலகத்துக்கு பூட்டு போட்டு கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி செயலாளர்கள், ஊராட்சி உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
    ×