என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
சாலை போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
- காலாவதியான சுங்க சாவடிகளை மூடக்கோரி நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு சாலை போக்குவரத்து சங்க மாவட்ட தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் முரளி, பரசுராமன் மாவட்ட துணை தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புதிய மோட்டார் வாகன சட்டத்தை கைவிட வேண்டும் ஆன்லைன் அபராதத்தை ரத்து செய்ய வேண்டும் காலாவதியான சுங்க சாவடிகளை மூட வேண்டும் அடிக்கடி சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






