மகுடஞ்சாவடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
மகுடஞ்சாவடியில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

மகுடஞ்சாவடி:

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1993-ல் பணியில் சேர்ந்த அங்கன்வாடி ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், சிலிண்டர் தொகையை பில்லில் உள்ள முழு தொகையையும் வழங்க வேண்டும், தமிழக முழுவதும் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான அங்கன்வாடி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com