என் மலர்

  செய்திகள்

  கொள்ளை
  X
  கொள்ளை

  டி.கல்லுப்பட்டியில் அரசு ஊழியர் வீட்டில் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டி.கல்லுப்பட்டியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  பேரையூர்:

  மதுரை மாவட்டம், டி.கல் லுப்பட்டியில் உள்ள மேலத் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 59). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஊழியராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். சில நாட்களுக்கு முன்பு ராஜேந்திரன் வீட்டை பூட்டிவிட்டு தனது குடும் பத்தினருடன் மன்னார் குடியில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

  இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட மர்ம நபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த 11¼ பவுன் நகையை திருடிக்கொண்டு தப்பினர்.

  வீட்டு கதவு திறக்கப்பட்டு கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர் நகைகள் திருட்டு போயி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  இதுகுறித்து ராஜேந்திரன், டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நகை திருடிய ஆசாமிகளை தேடி வருகின் றனர்.

  Next Story
  ×