search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூசணிக்காய்
    X
    பூசணிக்காய்

    உள்ளூர் வரத்து குறைந்தது - பொள்ளாச்சியில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்த பூசணிக்காய்

    உள்ளூர் வரத்து குறைந்ததால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு பொள்ளாச்சியில் இருந்து பூசணிக்காய் வந்து இறங்கியது.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள இடையகோட்டை, மார்க்கம்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், அரசபிள்ளைபட்டி, விருப்பாச்சி, மூலசத்திரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பூசணிக்காய் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மழை முற்றிலும் ஏமாற்றியதால் காய்கறி சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் பொள்ளாச்சி, மடத்துக்குளம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து அர்ஜூணா பூசணி, மஞ்சள் நிற பூசணி ஆகியவை 5 டன் அளவில் வந்து இறங்கியது.

    ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையானது. உள்ளூர் வரத்து அதிகமாக இருந்தபோது ஒரு கிலோ ரூ.2-க்கு விற்றது. அப்போது பூசணிக்காயை வாங்க ஆள் இல்லாததால் ஒடிசா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    ஆனால் தற்போது முற்றிலும் உள்ளூர் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. மழை ஏமாற்றி வருவதால் பூசணி மட்டுமின்றி பெரும்பாலான காய்கறிகள் விளைச்சல் குறைந்து வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

    Next Story
    ×