என் மலர்
செய்திகள்

மரணம்
ஆண்டிப்பட்டி அருகே வைகை ஆற்றில் மர்மமான முறையில் இறந்த லாரி டிரைவர்
ஆண்டிப்பட்டி அருகே வைகையாற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்த லாரி டிரைவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பெரியபுளியம்பட்டி முத்துச்சாமிபுரம் தெருவை சேர்ந்தவர் தங்கபாண்டி (வயது49). இவர் தனியார் பார்சல் சர்வீசில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று போடி பகுதிக்கு பார்சல் கொண்டு சென்றுள்ளார். ஆனால் இரவு வீடு திரும்ப வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி சவுந்தரம் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்காததால் க.விலக்கு போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆண்டிப்பட்டி அருகே குன்னூர் வைகையாற்றில் தங்கபாண்டி மர்மமான முறையில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவுக்கு வந்த பின்னரே தங்கபாண்டி எவ்வாறு இறந்தார் என்பது தெரிய வரும்.
Next Story