search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காசிமேடு மீன் மார்க்கெட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி கிருஷ்ணகிரி வாலிபர் கைது

    காசிமேடு மீன் மார்க்கெட்டில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயற்சி கிருஷ்ணகிரி வாலிபர் கைது

    ராயபுரம்:

    காசிமேட்டில், மீன் ஏலம் விடும் கிடங்கில் வியாபாரம் செய்து வருபவர் தேசப்பன். இன்று காலை அவர் வழக்கம் போல் வியாபாரத்தில் ஈடுபட்டு இருந்தார்.

    அப்போது வாலிபர் ஒருவர் ரூ.4,500-க்கு மீன் வாங்கி விட்டு பணத்தை 500 ரூபாய் நோட்டுகளாக கொடுத்தார். அதில் 7 கள்ள நோட்டுகள் இருப்பதை வியாபாரி தேசப்பன் கண்டுபிடித்தார்.

    இதையடுத்து அந்த வாலிபரை வியாபாரிகள் மடக்கி பிடித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீ சில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த முனுசாமி என்பது தெரிந்தது. அவர் மேலும் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை போலீசார் சோதனை செய்தனர்.

    அவரிடம் மொத்தம் ரூ.17 ஆயிரத்து 500 இருந்தது. இதில் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மொத்தம் ரூ.12 ஆயிரத்து 500 இருந்தது தெரிந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட முனுசாமியிடம் இருந்து மொத்தம் 16 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள் சிக்கி உள்ளது. அவர் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த வேலு என்பவரிடம் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்து உள்ளார்.

    இதையடுத்து முனு சாமிக்கு கள்ள நோட்டுகள் கிடைத்தது எப்படி? வேறு எங்கெல்லாம் இதனை புழக்கத்தில் விட்டு உள்ளார்? சென்னையில் கூட்டாளிகள் உள்ளனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காசிமேடு மீன் மார்க் கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற வாலிபர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×