என் மலர்

  செய்திகள்

  மீட்பு
  X
  மீட்பு

  கொடைரோட்டில் கொத்தடிமையாக இருந்த பீகார் மாணவி மீட்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைரோட்டில் கொத்தடிமையாக இருந்த பீகார் மாணவியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
  கொடைரோடு:

  பீகார் மாநிலம் மேற்கு செம்பரான் அருகே லார்லா நந்தகர் கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பள்ளிக்கு சென்ற இவரும் அவருடன் படித்து வந்த மற்றொரு மாணவியும் மாயமாகினர்.

  இது குறித்து மாணவியின் பெற்றோர் லார்லாநந்தகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் உடன் சென்ற மற்றொரு மாணவியை செல்போன் உரையாடலை வைத்து செகந்திராபாத்தில் கடந்த வாரம் மீட்டனர்.

  ஆனால் இதுவரை மீட்க முடியாமல் தொடர்ந்து தேடி வந்தனர். கொடைரோடு அருகே அவர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சென்னை வீட்டு வேலை செய்வோர் சங்கம், தொண்டு நிறுவனத்தினர் ஆகியோர் கண்டறிந்தனர்.

  ரெயில் மூலம் கொடைரோடு வந்த மாணவியை சைமா என்ற நபர் கடத்தி பள்ளப்பட்டியில் உள்ள தொழிற்பேட்டையில் வேலைக்கு சேர்த்துள்ளார். அவரது சம்பளத்தை வாங்கிக் கொண்டு மாணவியை கொத்தடிமை போல நடத்தி வந்ததும் தெரிய வந்தது.

  இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் அல அமைப்பு மற்றும் அம்மையநாயக்கனூர் போலீசார் அந்த மாணவியை மீட்டு லார்லாநந்தகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  Next Story
  ×