என் மலர்

  செய்திகள்

  ஆர்ப்பாட்டம்
  X
  ஆர்ப்பாட்டம்

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  திண்டுக்கல்:

  திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனை-1 முன்பு இன்று ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 1-ந் தேதி பென்சன், 154 சதவீத அகவிலைப்படி, ஓய்வுபெறும் அன்றே பணப்பலன் வழங்க வேண்டும், மருத்துவ காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

  மண்டல தலைவர் ஆனந்தன் தலைமை வகித் தார். மாநில தலைவர் கிருஷ்ணன், துணை பொதுச் செயலாளர் தேவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர். முடிவில் பொருளாளர் ஜெகநாதன் நன்றி கூறினார்.
  Next Story
  ×