என் மலர்

  செய்திகள்

  பணம் திருட்டு
  X
  பணம் திருட்டு

  துறையூர் பகுதியில் பார்வையற்றவர் வீட்டில் பணம் திருட்டு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  துறையூர் அருகே பார்வையற்றவர் வீட்டில் பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  துறையூர்:

  துறையூர் பாரதி நகரில் வசிப்பவர் நடராஜன்(வயது 62). இவருடைய மனைவி அன்னபூரணி(55). இவர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்படும் சத்தம் கேட்டு, எழுந்த அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதேபோல் செக்கடித் தெருவில் வசிக்கும் தியாகராஜனின்(60) வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு வீட்டுக்குள் நுழைய முயன்ற மர்மநபர்கள், வீட்டில் உள்ளவர்கள் எழுந்ததை கண்டு தப்பியோடினர்.

  மேலும் புதுக்காட்டுத் தெருவில் வசிக்கும் அப்பாவுவின் மனைவி லெட்சுமி(60) ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளார். அவருடைய வீடு அருகே வசிக்கும் பார்வையற்றவரான சிவக்குமார்(40) குடும்பத்துடன், உறவினர் வீட்டு விசேஷத்திற்காக திருக்கடையூர் சென்றிருந்தார். இந்நிலையில் லெட்சுமி, சிவக்குமார் ஆகியோருடைய வீட்டின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. சிவக்குமார் குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரூ.5,500 திருட்டுபோனது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லெட்சுமி வீட்டில் பணம், பொருட்கள் திருட்டு போயுள்ளதா? என்பது அவர் திரும்பி வந்து பார்த்த பின்னர்தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். துறையூர் பகுதியில் ஒரே நாள் இரவில் நடந்த திருட்டு மற்றும் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருட்டு சம்பவங்களை தடுக்க போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×