என் மலர்

  செய்திகள்

  ரவீந்திர நாத்குமார்
  X
  ரவீந்திர நாத்குமார்

  தேனியில் வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும் - ரவீந்திரநாத்குமார் பேச்சு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனியில் வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம் தொடங்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் ரவீந்திரநாத்குமார் கூறினார்.
  சென்னை:

  பாராளுமன்றத்தில் அ.தி.மு.க. மக்களவை குழுத்தலைவர் ஓ.ப.ரவீந்திர நாத்குமார் எம்.பி. “ஊரக வளர்ச்சி, வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல” அமைச்சகத்தின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது:-

  தமிழ்நாட்டின் வேளாண் துறையைப் பொறுத்தமட்டில், 201920 ஆம் ஆண்டில் தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் 99800 கோடி ரூபாய், 2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான தேசிய மூங்கில் வளர்ச்சி இயக்க நிதி 16 கோடி ரூபாய், தேசிய வேளாண் மற்றும் தொழில் நுட்ப விரிவாகத்திட்டத்தின் கீழ் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று பிரிவுகளை வலுப்படுத்துவதற்கான 60 கோடி ரூபாய் நிதி ஆகியவற்றை அளித்திடுமாறும், 2019-20ஆம் ஆண்டில் நிலைத்த வேளாண் வளர்ச்சிப் பணிகளுக்கான 5903 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி கொடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

  நீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதில் சிக்கனமான வழிகளை கடைப்பிடிக்கும் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கி ஊக்குவிக்கும் வகையில் ஒரு கொள்கையை வகுக்க வேண்டும்.

  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதில் தமிழகம் ஐந்து விருதுகளை மத்திய அரசிடமிருந்து பெற்றிருக்கிறது. விவசாயத்திற்கு முன்பும், அறுவடை காலம் முடிந்த பிறகும், ஏழை விவசாயிகளுக்கு உதவிடும் வகையில் புதிதாக “குளிர்பதன கிடங்குகள்” அமைப்பவர்களை ஊக்கமளிக்கும் வகையிலும், வேளாண்துறைக்குப் பயன்படும் வகையிலும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை ஒருங்கிணைக்க வேண்டும்.

  பருவ மழை பொய்த்ததால் தமிழ்நாடு சந்தித்துள்ள வறட்சியை சமாளிக்க தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தை மேலும் 50 நாட்கள் அதிகரிக்க வேண்டும்.

  எனது தேனி பாராளுமன்ற தொகுதியில் மாங்கனி, திராட்சை, தென்னை போன்ற பல்வகை வேளாண்மை நடைபெறுகிறது. ஆகவே எனது தொகுதியில் மிகப்பெரிய “வேளாண் பொருட்கள் விற்பனை நிலையம்” ஒன்றை துவக்க வேண்டும்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  Next Story
  ×