என் மலர்

  செய்திகள்

  கத்திகுத்து
  X
  கத்திகுத்து

  தேனி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணை கத்தியால் குத்தியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேனி அரசு ஆஸ்பத்திரியில் பெண்ணை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

  ஆண்டிப்பட்டி:

  பெரியகுளம் அருகே எண்டப்புளி புதுப்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது42). இவர் தனது மனைவியுடன் தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போது அவர்கள் 2 பேருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனால்ஆஸ்பத்திரி வளாகத்திலேயே 2 பேரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தனர். பால கோம்பை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த கருப்பம்மாள் (33). தனது மகன் சிகிச்சைக்காக ரத்தபரிசோதனை செய்ய தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளார். அப்போது முருகன் மற்றும் அவரது மனைவி சண்டையிடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 2 பேரையும் விலக்க சென்றார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கருப்பம்மாளை குத்தி உள்ளார். மேலும் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளார்.

  இதுகுறித்து க.விலக்கு போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×