search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "theni govt hospital"

    • தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.50 கோடியில் ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
    • ஆயுர்வேத சிகிச்சை பிரிவு கட்டிடத்தை டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் மற்றும் இந்திய ஹோமியோபதி மருத்துவ இணைஇயக்குனர் ஆகியோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆண்டிபட்டி:

    தமிழகத்தில் தேனி, திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு தொடங்க அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து தேனி அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.6.50 கோடியில் ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.

    3 தளங்களில் தனித்தனி பிரிவுகள், 50 படுக்கை வசதி கொண்ட இந்த கட்டிடம் 2 ஆண்டுகளுக்கு மேலாக திறக்கப்படவில்லை.

    இந்த நிலையில் ஆயுர்வேத சிகிச்சை பிரிவு கட்டிடத்தை டெல்லி ஆயுர்வேத அமைச்சக இயக்குனர் ரகு, இந்திய ஹோமியோபதி மருத்துவ இணைஇயக்குனர் பார்த்திபன் ஆகியோர் தலைமையிலான மருத்துவகுழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு கட்டிடத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்து மருத்துவ கல்லூரி டாக்டர்களுடன் குழுவினர் ஆேலாசனை நடத்தினர். இதுகுறித்த அறிக்கை அரசிடம் சமர்பிக்கப்படும்.

    அரசு உத்தரவு பெற்று ஆயுர்வேத ஒருங்கிணைந்த சிகிச்சை பிரிவு விரைவில் திறக்கப்படும் என டெல்லி மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

    ×