என் மலர்

  செய்திகள்

  தற்கொலை (கோப்பு படம்)
  X
  தற்கொலை (கோப்பு படம்)

  மகளை பார்க்க அனுமதி மறுப்பு - வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சோழவந்தான் அருகே மகளை பார்க்க அனுமதி மறுத்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
  சோழவந்தான்:

  சோழவந்தானை அடுத்த பெரிய இரும்பாடி மாயாண்டி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சோனை (வயது 28). இவருக்கு மனைவி, மகள் உள்ளனர்.

  இந்த நிலையில் சோனைக்கும், மனைவிக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்தது. இதனால் மனைவி கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

  இதற்கிடையே சோனை நேற்று மனைவி, மகளை பார்ப்பதற்காக மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது அவருக்கு மகளை காட்ட மனைவி மறுத்து விட்டார்.

  இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சோணை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சோழவந்தான் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவாஜி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×