search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
    X
    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

    மருத்துவ மாணவர் சேர்க்கை- பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது

    தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். கடந்த 7-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. அத்துடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், மாணவ-மாணவிகள் தங்களுடைய சான்றிதழ் நகல்களை இணைத்து அனுப்பினர்.

    இதையடுத்து கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை கடந்த 6-ம்தேதி சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டார். அதன்பின்னர் 8-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. முதல் நாளில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

    இந்நிலையில், பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் 685 முதல் 610 வரை மதிப்பெண் எடுத்த 103 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது.

    சிறப்பு பிரிவில் காலியாக உள்ள இடங்கள் பொதுப்பிரிவுக்கு மாற்றப்பட்டு கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.

    மருத்துவ கல்வி

    கலந்தாய்வை தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், மருத்துவ கல்வி சேர்க்கையில் இந்த ஆண்டு கூடுதலாக 350 இடங்கள் பெறப்பட்டிருப்பதாக கூறினார். பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்திற்கு கூடுதல் இடங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    Next Story
    ×