search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தீ விபத்தில் எரிந்து கிடக்கும் சவுக்கு மரங்கள், பந்தல் அலங்கார பொருட்கள்.
    X
    தீ விபத்தில் எரிந்து கிடக்கும் சவுக்கு மரங்கள், பந்தல் அலங்கார பொருட்கள்.

    திருவிடைமருதூரில் பந்தல் காண்டிராக்டர் குடோனில் தீ விபத்து- பொருட்கள் எரிந்து சேதம்

    திருவிடைமருதூரில் பந்தல் காண்டிராக்டர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் அய்யனார் கோவில் தெருவில் வசித்து வருபவர். கலியபெருமாள். (வயது64). பந்தல் காண்டிராக்டர். திருமணவிழா மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் மாநாடு, பொதுக்கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பந்தல் மற்றும் டெக்கரே‌ஷன் பொருட்களை வாடகைக்கு விட்டு வருகிறார்.

    இதற்குரிய சவுக்குமரம், திருமண மேடை, அலங்கார துணிகள், கார்பெட்டுகள், ஆர்ச்சுகள் உள்ளிட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களை வீட்டின் அருகில் சுமார் 3 ஆயிரம் சதுர அடியில் குடோன் அமைத்து அங்கு வைத்திருந்தார்.

    இந்நிலையில் அவரது குடோனில் நேற்று நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனை இன்று காலையில் பார்த்த அருகில் உள்ளவர்கள் இதுபற்றி கலியபெருமாளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் அங்கு விரைந்து வந்து பார்த்தபோது குடோனில் வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மேலும் குடோனுக்கு அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடியில் உள்ள கீற்றுக் கொட்டகை மற்றும் தென்னைமரம், பிளாஸ்டிக் வாட்டர் டேங்க் ஆகியவையும் இந்த தீவிபத்தில் சேதமானது தெரியவந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு திருவிடைமருதூர், கும்பகோணம், குத்தாலம் பகுதிகளில் இருந்து தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீவிபத்தில் கலியபெருமாளின் குடோனில் இருந்த சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான அனைத்து பந்தல் பொருட்களும் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது.

    புகாரின்பேரில் திருவிடை மருதூர் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×