search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "goods damage"

    பரமத்திவேலூர் அருகே நார்மில்லில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான நார்கள் எரிந்து நாசமானது.
    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் தனசேகரன் (வயது 50). இவர் நார் மில் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நார்மில்லில் உள்ள நார்கள் திடீரென தீப்பிடித்து எரிய ஆரமித்தது. இதை பார்த்த அருகில் உள்ளவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் தனசேகரன் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்து அருகில் உள்ள வீடுகளுக்கும், தோட்டங்களுக்கும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான நார்கள் எரிந்து நாசமானது.
    வையம்பட்டி அருகே மண்எண்ணை விளக்கு சரிந்து தீ பிடித்ததில் 2 கடைகள் தீயில் எரிந்து நாசமாகின. அதில் இருந்த ரூ.40ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின.
    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 70). இவர் அங்கு சலூன் கடை வைத்துள்ளார். அவரது கடை அருகே காமாட்சி (45) என்பவர் துணிகளை சலவை செய்து கொடுக்கும் கடை வைத்துள்ளார். இரு கடைகளும் குடிசையிலான கடைகள் ஆகும். 

    இந்தநிலையில் நேற்றிரவு காமாட்சி கடையிலேயே  தூங்கினார். நள்ளிரவில் அங்கு வெளிச்சத்திற்காக வைக்கப்பட்டிருந்த  மண்எண்ணை விளக்கு தீ திடீரென குடிசையில் பற்றி எரிந்தது. இதையடுத்து சுதாரித்து கொண்ட காமாட்சி அங்கிருந்து தப்பினார். தீ மளமளவென பற்றி எரிந்தது. அருகில் இருந்த லட்சுமணன் கடையிலும் பற்றியது. 

    இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் தீயை அணைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மணப்பாறை நிலைய அலுவலர்  கணேசன்  தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் 2 கடைகளும்  தீயில் எரிந்து நாசமாகின. அதில் இருந்த ரூ.40ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகின. 

    இந்த சம்பவம் குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×