search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்சென்னைக்கு கூடுதல் பஸ்கள்

    புதிதாக விடப்பட்ட 100 பஸ்களில் 40 பஸ்கள் சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் விடப்படுகிறது.
    சென்னை:

    சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் 3500 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் ஓடிய பஸ்கள் படிப்படியாக மாற்றப்பட்டு வருகின்றன.

    சென்னைக்கு மட்டும் புதிய பஸ்கள் சிகப்பு கலரில் தயாரிக்கப்பட்டு விடப்பட்டுள்ளது.

    கடந்த 2½ ஆண்டுகளில் 460 புதிய பஸ்கள் மாநகர மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டை உடைசலான பஸ்கள், ஓடத் தகுதியற்ற பஸ்கள் மாற்றப்பட்டுள்ளன.

    நேற்று 100 புதிய பஸ்கள் விடப்பட்டதையும் சேர்த்து இந்த எண்ணிக்கையில் அடங்கும். புதிய பஸ்கள் தெற்கு புறநகர் பகுதிகளுக்கு அதிகம் விடப்படுகிறது.

    தாம்பரம், செங்கல்பட்டு, பழைய மகாபலிபுரம், சிறுசேரி வரை புதிய பஸ்கள் இயக்கப்படுகிறது. புதிதாக விடப்பட்ட 100 பஸ்களில் 40 பஸ்கள் சென்னையின் தெற்கு புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் விடப்படுகிறது.

    ஒவ்வொரு பஸ்சும் 11 நடை (ட்ரிப்) தினமும் சென்று வரும் வகையில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை வடக்கு புறநகர் பகுதியை விட தெற்கு பகுதியில் தான் குடியிருப்புகள், நகர்கள் உள்ளன.

    சேவையோடு வணிக ரீதியாகவும் பார்க்கும் போது பஸ் தேவை அதிகமாக உள்ளது. அதனால் தெற்கு புறநகர் பகுதிகளுக்கு புதிய பஸ்கள் அதிக அளவு இயக்கப்படுவதாக போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    மேலும் பொது மக்களின் தேவையை கருதி பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களும் மாற்றப்பட்டுள்ளன. 579 ஏ தாம்பரம்-வாலாஜாபாத், 21ஜி தாம்பரம்-பிராட்வே, 23 சி அயனாவரம்-பெசன்ட் நகர், 29சி பெரம்பூர்- பெசன்ட்நகர், 27 பி அண்ணா சதுக்கம்- கோயம்பேடு ஆகிய வழித்தடங்களில் புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன.
    Next Story
    ×