search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பு இல்லை- கூலாக பதில் சொன்ன டிடிவி தினகரன்

    கட்சியில் இருந்து யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான இசக்கி சுப்பையா அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்தார். அத்துடன் தனது ஆதரவாளர்கள் சுமார் 20 ஆயிரம் பேருடன் தாய்க்கழகமான அதிமுகவில் இணையப் போவதாகவும் கூறினார்.

    இசக்கி சுப்பையா

    இதுபற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்  டிடிவி தினகரனிடம் நிருபர்கள் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ஏற்கெனவே நான் சொன்னதுதான். நிர்வாகிகள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக, சுயநலத்துக்காக வெளியே போகிறார்கள் என்றால் அவர்களை தடுத்துநிறுத்தி என்ன ஆகப்போகிறது. கட்சி என்பது விருப்பப்பட்டு இருப்பதுதான்.

    இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.  தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்களில் போடுங்கள்.  யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×