search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    டிடிவி தினகரன்
    X
    டிடிவி தினகரன்

    தமிழக மக்கள் பற்றி விமர்சனம் - கிரண்பேடிக்கு தினகரன் கண்டனம்

    ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல என்று கிரண்பேடிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தண்ணீர் பிரச்சினையில் தமிழக மக்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் புதுவை துணை ஆளுநர் கிரண்பேடி கருத்து தெரிவித்து இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒரு மாநிலத்தின் ஆளுநர் பொறுப்பில் இருந்து கொண்டு பக்கத்து மாநில மக்களை இழிவுபடுத்தி பேசுவது அவரது பதவிக்கு அழகல்ல.

    அப்படி ஏதாவது கேட்க நினைத்தால் அவர் பதிவிட்டுள்ளபடி நிர்வாக திறனற்ற இந்த ஆட்சியை இரண்டு ஆண்டுக்கு மேலாக பாதுகாத்து வருபவர்களிடம் கேள்வி கேட்கட்டும். அம்மா என்கிற இரும்புப் பெண்மணி ஆண்ட தமிழகத்தை பிறர் கேலி பேசுகிற நிலைக்கு இன்றைய ஆட்சியாளர்கள் ஆளாக்கிவிட்டது வேதனை அளிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×