search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தலைமை செயலாளர் கே சண்முகம்
    X
    தலைமை செயலாளர் கே சண்முகம்

    புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகம் நியமனம்- டிஜிபியாக திரிபாதி நியமனம்

    தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக கே.சண்முகமும், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
    சென்னை:

    தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் சட்டம் ஒழுங்கு டிஜிபி ராஜேந்திரன் ஆகியோர் நாளையுடன் ஓய்வு பெறுகின்றனர். இதையடுத்து அந்த பதவிகளுக்கு புதிய அதிகாரிகளை அரசு நியமித்துள்ளது.

    நிதித்துறை செயலாளராக இருந்த கே.சண்முகம் புதிய தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக அரசின் 46-வது தலைமை செயலாளர் ஆவார். இதேபோல் சீருடைப் பணியாளர் தேர்வாணைய தலைவராக இருந்த திரிபாதி சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    1985 ஆண்டில் நேரடியாக தேர்வாக ஐஏஎஸ் அதிகாரி ஆன சண்முகம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது, நிதித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 9 வருடங்களாக அந்த பொறுப்பில் இருந்த நிலையில், தற்போது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி

    1985ம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான திரிபாதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி, காவல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி, தென் மண்டல ஐஜி, சிபிசிஐடி ஐஜி உள்ளிட்ட உயர் பொறுப்புகளை வகித்தவர்.

    Next Story
    ×