search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்- வைரமுத்து டுவிட்
    X

    தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன்- வைரமுத்து டுவிட்

    பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என பாடலாசிரியர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி இன்று 2-வது நாளாக நடந்தது. நேற்று 313 எம்.பி.க்கள் பதவியேற்ற நிலையில் இன்று மீதமுள்ள உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.

    தமிழக எம்.பி.க்கள் அனைவரும் தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். உறுதிமொழி எடுத்ததும் பெரும்பாலான எம்.பி.க்கள் தமிழ் வாழ்க என்ற கோ‌ஷத்தை எழுப்பினார்கள். சில எம்.பி.க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்று கூறினார்கள்.



    இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து  பாராளுமன்றத்தில் தமிழில்  உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில் ‘‘பாராளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன். நாம் எந்த மொழியையும்  எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை. சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள். பயணிப்போம் - மொழி காக்க; தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.’’ என பதிவிட்டுள்ளார்.
    Next Story
    ×