search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பழனி முருகன் கோவில் உண்டியல் மூலம் ரூ.1¼ கோடி வருவாய்
    X

    பழனி முருகன் கோவில் உண்டியல் மூலம் ரூ.1¼ கோடி வருவாய்

    பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் மூலம் ரூ.1¼ கோடி வருவாய் கிடைத்துள்ளது.
    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பணம், தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் பழனி கோவிலின் உபகோவில்களான திருஆவினன்குடி, பெரிய நாயகி, பெரியாவுடையார், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் உள்ளிட்ட கோவில்களிலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்துகின்றனர்.

    அவை கோவில் நிர்வாகம் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. இந்த மாதம் 10, 11-ந்தேதிகளில் உண்டியல் எண்ணிக்கை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று பழனி மலைக்கோவிலில் உள்ள கார்த்திகை மண்டபத்தில் பழனி முருகன் கோவில் மற்றும் உபகோவில்களின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

    இதற்கு மதுரை மண்டல இணை ஆணையர் பச்சமுத்து, பழனி கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், முதுநிலை கணக்கு அலுவலர் மாணிக்கவேல், மேலாளர் உமா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 1 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 080 வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கத்தாலான வேல், மோதிரம், தாலி, காசு என 453 கிராம் பொருட்கள், வெள்ளியாலான வேல், பாதம் உள்ளிட்ட பொருட்கள் 3¼ கிலோ (3240 கிராம்), வெளிநாட்டு கரன்சி நோட்டுக்கள் 184-ம் பக்தர்களால் காணிக்கையாக போடப்பட்டிருந்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியிலுள்ள வங்கி அலுவலர்கள், கோவில் ஊழியர்கள் மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×