என் மலர்

  செய்திகள்

  களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு
  X

  களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கடும் பாதிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  களக்காட்டில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
  களக்காடு:

  களக்காட்டில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல்- இரவு நேரங்களில் திடீர் என முன்னறிவிப்பு ஏதும் இன்றி மின் தடை ஏற்படுகிறது. தற்போது சாரல் மழை தொடங்கியுள்ளது. இதனால் மின்சாரத்தின் பயன்பாடு குறைந்து வரும் நிலையில் மின் சப்ளை துண்டிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் மின் தடையால் பொதுமக்கள் கொசுக்கடியில் தவிக்கின்றனர். 

  சில நேரங்களில் மின் அழுத்த குறைபாடும் காணப்படுவதால் மின் சாதனங்கள் பழுதடைகின்றன. 

  இந்நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு மின் தடை ஏற்பட்டது. அதன்பின் 3 1/2 மணி நேரத்திற்கு பிறகு இரவு 7.30 மணிக்கு சீரானது. எனவே சீரான மின் விநியோகம் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  Next Story
  ×