என் மலர்

  செய்திகள்

  சுவாமிமலை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து மனைவியை கொல்ல முயற்சி- கணவர் கைது
  X

  சுவாமிமலை அருகே பிளேடால் கழுத்தை அறுத்து மனைவியை கொல்ல முயற்சி- கணவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுவாமிமலை அருகே குடும்ப தகராறில் மனைவியை பிளேடால் கழுத்தை அறுத்து கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

  சுவாமிமலை:

  கும்பகோணத்தை அடுத்த சாக்கோட்டை கீழமாத்தியை சேர்ந்த பன்னீர் மகன் ராஜகுரு (வயது24). இவரது மனைவி மகாலெட்சுமி (20). கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

  இந்த நிலையில் கணவன்- மனைவி இருவரும் பரட்டை என்ற இடத்தில் வயல் வெளியில் நடந்து சென்றனர். அப்போது ராஜகுரு திடீரென பிளேடால் மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி சென்றுவிட்டார். இதில் படுகாயமடைந்த மகாலெட்சுமி கும்பகோணஎம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

  இதுபற்றிய புகாரின் பேரில் சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகுருவை கைது செய்தனர்.

  Next Story
  ×