search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2 ஆயிரம் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்
    X

    2 ஆயிரம் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் - அமைச்சர் விஜயபாஸ்கர்

    சென்னை, மதுரை, கோவை நகரங்களில் முதல் கட்டமாக 2 ஆயிரம் மின்சார பஸ்கள் விரைவில் இயக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    பள்ளி வாகனங்களை ஆய்வு செய்யும் பணி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

    சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள செட்டிநாடு பள்ளி வாகனங்களை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஹெல்மெட் போடாமல் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து பரிசீலிக்கப்படும்.



    விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால்தான் லைசென்ஸ் ரத்து செய்யப்படுகிறது. பொதுவாக நகரங்களை விட கிராமப்புறங்களில்தான் ஹெல்மெட் போடுவதை கடை பிடிக்காமல் இருக் கிறார்கள். கிராமங்களில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

    2000 மின்சார பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, மதுரை, கோவை நகரங்களில் முதல் கட்டமாக இயக்கப்படும்.

    இந்த வருடம் 24 லட்சத்து 205 மாணவர்களுக்கு பஸ்களில் இலவச பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறையின் மூலம் இதனை வழங்க இருக்கிறோம்.

    பள்ளி வாகனங்கள் இதுவரை 31,143 ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இதில் 1009 வாகனங்கள் மாணவர்களின் பாதுகாப்பு குறைவாக இருந்ததாக இயக்க அனுமதிக்கவில்லை.

    பின்னர் அவற்றை சரி செய்த பின்னர் இயக்க அனுமதிக்கப்பட்டது. 1143 பள்ளி வாகனங்கள் சாலையில் இயக்க தகுதியற்றதாக கருதி நிறுத்தப்பட்டுள்ளது. மீறி இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து கமி‌ஷனர் சமய மூர்த்தி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×