என் மலர்

  செய்திகள்

  நவீன் பட்நாயக், ஜெகன் மோகன்ரெட்டிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
  X

  நவீன் பட்நாயக், ஜெகன் மோகன்ரெட்டிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதல்வராக பதவி ஏற்று கொண்ட ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக்கிற்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதி உள்ளார்.
  சென்னை:

  ஒடிசா முதல்-மந்திரியாக பதவி ஏற்ற நவீன் பட்நாயக்கிற்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  ஒடிசாவில் 5-வது முறை முதல்-மந்திரியாக பதவி ஏற்று சாதனை நிகழ்த்தியுள்ள உங்களுக்கு தமிழ்நாட்டு மக்களின் சார்பாக வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  உங்களது உறுதியான தலைமையின் கீழ் ஒடிசாவின் மேம்பாடு மேலும் ஸ்திரமடையும் என்றும், நமது மாநிலங்களுக்கு இடையிலான கூட்டுறவு மேலும் புதிய உயரத்தை அடையும் என்றும் நம்புகிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  ஆந்திர பிரதேச முதல்-மந்திரி ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டிக்கு, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய வாழ்த்துக் கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  ஆந்திர பிரதேசத்தின் முதல்-மந்திரியாக பதவி ஏற்றுள்ளதற்கு, தமிழக மக்களின் சார்பாகவும், எனது தனிப்பட்ட சார்பிலும் வாழ்த்து கூறுகிறேன். ஆந்திர பிரதேச மக்களுக்கு சேவை செய்வதில் உங்கள் தந்தையின் அடிச்சுவடுகளை பின்பற்றுவீர்கள் என்று நம்புகிறேன். தமிழ்நாடும், ஆந்திர பிரதேசமும், கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியாக நூற்றாண்டு காலமாக நெருங்கிய உறவு கொண்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளிலும் நமது மக்களின் நலனுக்காக இரண்டு மாநிலங்களின் உறவும் பரஸ்பரம் தொடரும் என்று எண்ணுகிறேன்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×