என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை
  X

  திருவள்ளூரில் கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூரில் டிபன் கடையின் பூட்டை உடைத்து கல்லா பெட்டியில் இருந்த ரூ.10 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மா.பொ.சி நகரை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஜே.என் சாலை ஆயில் மில் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார்.

  நேற்று இரவு அவர் வழக்கம் போல் கடையை மூடிவிட்டு சென்றார். இன்று அதிகாலை கடைக்கு வந்தபோது ‌ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

  உள்ளே சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.10 ஆயிரம் கொள்ளை போய் இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

  நகரின் முக்கிய சாலையில் உள்ள கடையில் கொள்ளை நடந்த சம்பவம் வியாபாரிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
  Next Story
  ×