search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓசூர் கோட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    ஓசூர் கோட்டத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    ஓசூர் கோட்டத்தில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    ஓசூர்:

    ஓசூர் மின்வாரிய செயற் பொறியாளர் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணை மின் நிலையத்தில், நாளை (வெள்ளிக்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

    எனவே ஓசூர் டி.வி.எஸ்.நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டான் டவுன்சிப், சிவகுமார் நகர், கொத்தூர், கொத்தகொண்டபள்ளி, பொம்மாண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், நியூ அட்கோ, ராம் நகர், பேருந்து நிலையம், ஸ்ரீநகர், அப்பாவு நகர், காமராஜ் காலனி, அண்ணா நகர், டைட்டான் இன்டஸ்ட்ரீஸ், அசோக் லேலண்ட்-1, சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், பாலாஜி நகர் (சின்ன எலசகிரி), ஆனந்த நகர், சாந்தபுரம், அரசனட்டி, சூர்யா நகர், அண்ணாமலை நகர், கிருஷ்ணா நகர், எம்.ஜி.ரோடு, அலசநத்தம், நரசிம்மா காலனி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×